தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட் கூரையை பிரித்து உள்ளே சென்ற கொள்ளையன்

தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட் கூரையை பிரித்து உள்ளே சென்ற கொள்ளையன்
X

கொள்ளையன் பணத்தை கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி

தாம்பரம் அருகே சூப்பர் மார்க்கெட் கூரையை பிரித்து உள்ளே சென்ற கொள்ளையன் 50 ஆயிரம் ரூபாய் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் முடிச்சூர் சாலையில் தங்கம் சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.

வழக்கம் போல நேற்று இரவு உரிமையாளர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றவர் இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேலும் மேல் கூரையை பிரித்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்தது, பின்னர் இந்த சம்பவம் இதுகுறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் கடைக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்மநபர் தனிஒருவாக கடையின் மேல்கூரையை பிரித்து கொண்டு உள்ளே வந்து கடையில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து பெருங்குளத்தூர் பகுதியில் வீடுகளை மட்டுமே குறிவைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் தற்போது கடையின் கூரைகளை பிரித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது கடைக்காரர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு போலீசார் இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க விரைவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பணி நிமிர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!