தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூ பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி.சாலையில் சென்னை போக்குவரத்து போலீசார் மற்றும் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி இணைந்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர் குமார் மற்றும் உதவி ஆணையர் ஶ்ரீதர் ஆகியோர் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்களுக்கு முககவசம், சானிடேசர் ஆகியவற்றை வழங்கினர்.

அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவலர்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் தே.தேவ் ஆனந்த், தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயவேல், கல்லூரி துணை முதல்வர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!