சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
X

நிதியுதவி காசோலையை பெற்றுக்கொள்ளும் பயணாளிகள்.

தாம்பரம் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் 75 நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சாலை விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு காசோலைகள் வழங்குதல் மற்றும் பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வட்டாட்சியர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஈ. கருணாநிதி கலந்துகொண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ,2லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள காசோலைகள் மற்றும் 25 குடும்ப உறுப்பினர்களுக்கு பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழ்களை வழங்கினார்.

காசோலைகள் மற்றும் ஜாதிச் சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!