திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி

திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நிவாரண உதவி
X
தாய் உதவும் கரங்கம் அமைப்பின் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படடது.
திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்துள்ள மேலக்கோட்டையூரில் திருதாய் உதவும் அறக்கட்டளை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகளின் குடும்பத்தினருகு அரிசி, பருப்பு காய்கறிகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் பலர் பாதிக்கப்ப்ட்டுள்ளனர்.தொடர்மழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்தும், வாழ்வாதரம் இழந்தும் மக்கள் தவித்து வருகின்றனர்.

அவ்வாறு மழையால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோருக்கு திருதாய் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் 10 கிலோ அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை திருதாய் உதவும் அறக்கட்டளை நிறுவனர் தைபா, துணை தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர்..சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினருக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!