தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் அகற்றம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் அகற்றம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
X

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டாதல் வாகனங்கள் வழக்கம் போல் செல்கின்றது.

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் மோட்டார் வைத்து முழுவதுமாக அகற்றம். வாகனங்கள் வழக்கம் போல் செல்கின்றது.

தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் மோட்டார் வைத்து முழுவதுமாக அகற்றம். வாகன ஓட்டிகள் சுரங்கபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கபாதை, ஜி.எஸ்.டி.சாலை, கிழக்கு தாம்பரம் எம்.இ.எஸ்.சாலையை இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.
இந்த வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். தொடர் கன மழையின் காரணமாக சுரங்கப்பாதை நேற்று முற்றிலுமாக மூழ்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை மோட்டார் வைத்து தாம்பரம் நகராட்சி நிர்வாகம் இறைத்து விட்டனர். இதனால் சுரங்கபாதையில் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டு வாகனங்கள் வழக்கம் போல் செல்கின்றது.

இருப்பினும் தேங்கிய மழை நீரால் ஏற்பட்ட சேரும் சகதியும் அப்படியே இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது அதனை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு