தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
தாம்பரத்தில் ரயில்வே ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ரயில் நிலையம் முன்பு ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து எஸ்.ஆர் எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ் ஆர் எம் யு வின் துணை பொதுச்செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் தலைமை தாங்கினார். இதில் 75 ஆண்டுகள் மக்கள் பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை 6 லட்சம் கோடி க்கு தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை உடனே கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!