பம்மலில் சி.ஏ.ஏ. சட்டத்தை எதிர்த்து த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்!

இந்திய குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பம்மலில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Pummel Meaning in Tamil-செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த பம்மலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இந்தியக் குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துவதை எதிர்த்தும், அந்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட செயலாளர் நயினார் முகம்மது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய நயினார் முகம்மது, கொரோனா காலத்தில் மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது, அதைப்பற்றி கவலைபடாமல் முஸ்லில்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதில் விடுதலை சிறுத்தை கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், பம்மல் நகர த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் பாரூக், அணி செயலாளர் அகமது, நகர செயலாளர்கள் ரஹ்மத்துல்லாஹ், பராத்துல்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu