பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடையை மீறி ஊர்வலம்: 950 பேர் கைது
சென்னை தாம்பரத்தில் தடையை மீறி ஊர்வலம் சென்ற பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 950 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தாம்பரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம், என்பதை வலியுறுத்தி ஒற்றுமை அணிவகுப்பு பேரணியை இன்று நடத்த இருந்த நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி பேரணி நடத்த 1000 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு பேரணி செல்லாதவாறு சாலையில் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அனைவரையும் கைது செய்து பல்வேறு மண்டபங்களில் அடைத்தனர். கைதானதில் 600 ஆண்கள், 230 பெண்கள், 120 குழந்தைகள் ஆவர்.
முன்னதாக காவல் துறை, மற்றும் தமிழக அரசிற்கு எதிராக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர். அந்த அமைப்பின் மாநில தலைவர் அன்சாரி கைதுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுக ஆட்சியை கூட பாஜக தான் இயக்கியதாகவும், அப்போது கூட தங்களுக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என கூறி கொள்ளும் திமுக அரசு எங்கள் பேரணிக்கு அனுமதி மறுத்தது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu