/* */

போலீசார் சைக்கிளில் ரோந்து பணி : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

தாம்பரம் போலீசார் சைக்கிளில் ரோந்து பணிக்கு சென்றபோது சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்தனர்.

HIGHLIGHTS

போலீசார் சைக்கிளில் ரோந்து பணி : சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது
X

தாம்பரம் போலீசார் சைக்கிளில் ரோந்து பணி சென்றபோது கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலை, பழைய செக்போஸ்ட் அருகே தாம்பரம் போலீசார் சைக்கிள் ரோந்து பணியில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் 6 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சம்பவ இடத்தில் போலீசார் சென்ற போது கும்பலாக நின்று கொண்டிருந்த ஒரு கும்பல அங்கிருந்து சிதறி ஓட முயன்றது. சைக்கிளில் போலீசார் சென்றதால் சுதாரித்து கொண்டு ஓட முடியாத நபர்களை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சக போலீசார் உதவியுடன் விரட்டிச் சென்று பிடித்தார்.

பிடித்த நபரை சோதனை செய்து பார்த்த போது வயிற்றில் சுமார் 1 1/2 அடி நீளமுள்ள கத்தியை வைத்திருந்தான். அதனை பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் சார்லஸ் விசாரித்த போது கைதானவர்கள் புதுபெருங்களத்தூரை சேர்ந்த தங்கதுரை(20), நெடுங்குன்றத்தை சேர்ந்த அலன்ராஜ்(26), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த விஜய்(எ) பிரதீப்(21), குரோம்பேட்டையை சேர்ந்த கருப்பு லோகேஷ்(எ) லோகேஷ்வரன்(25), என்பதும் இவர்கள் பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருவதும், ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதில் கருப்பு லோகேஷ் சரித்திர பதிவேடு குற்றவாளி அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் மற்ற மூவர் மீதும் தாம்பரம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அவர்களிடமிருந்து கத்தி, இரண்டு இருசக்கர வாகனம், மாத்திரை ஊசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு தொடர்ந்து தப்பியோடிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...