மசாஜ் சென்டா் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட வாலிபர் கைது; 4 பெண்கள் மீட்பு

மசாஜ் சென்டா் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட வாலிபர் கைது;  4 பெண்கள் மீட்பு
X

பாலியல் தாெழில் நடத்திய சடையப்பன்.

தாம்பரத்தில் மசாஜ் சென்டா் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய வாலிபரை போலீசாா் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் முத்துலிங்கம் சாலையில் தாம்பரம் போலீஸ் நிலையம், அனைத்து மகளீா் போலீஸ் நிலையம் மற்றும் தாம்பரம் போலீஸ் உதவி ஆணையா் அலுவகம் ஆகியவை உள்ளன.

அதே முத்துலிங்கம் சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபா் ஒருவா் வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு மசாஜ் செண்டா் நடத்தப்போவதாக கட்டிட உரிமையாளரிடம் கூறினாா். அதை நம்பிய கட்டிட உரிமையாளா் அவருக்கு தனது கட்டிடத்தை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த கட்டிடத்தில் மசாஜ் செண்டா் தொடங்கி நடந்து வந்தது. ஆனால் அதற்கான போா்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இளம் பெண்கள் சிலா் அடிக்கடி இங்கு வந்து சென்றனா். அதோடு ஆண்களும் பலா் இங்கு வந்தனா்.

குறிப்பாக மாலையிலிருந்து நள்ளிரவு வரை இங்கு வந்து சென்றனா். இதை கவனித்த அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரகசியமாக போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.

தகவலின் பேரில், தாம்பரம் போலீசாா் நேற்று இரவு குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு வாலிபர் ஒருவர், நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த கட்டிடத்தை பூட்டிவிட்டு, அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினா். அப்போது மசாஜ் செண்டா் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர், திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சடையப்பன் (28) என்பது தெரியவந்தது.

மேலும் அந்தப் பெண்கள் சென்னை ஜாபர்கான்பேட்டை, கொடுங்கையூர், அஸ்தினாபுரம், பல்லாவரம் பகுதிகளை சேர்ந்தவா்கள். 21 முதல் 28 வயது உடைய இளம் பெண்கள் என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலீசார், சடையப்பன்னை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை நீதிமன்ற உத்தரவின்படி அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக தாம்பரம் போலீசாா் மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!