செங்கல்பட்டு மாவட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை!

செங்கல்பட்டு மாவட்ட முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை!
X

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய நுழைவாயிலாக கருதப்படும் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களின் இ பாஸ் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். முறையான ஆவணம் இல்லாத வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். பழைய மகாபலிபுரம் சாலை, ஈசிஆர் சாலை, திருப்போரூர் சாலை, தாம்பரம் ,பல்லாவரம், திருப்போரூர், மதுராந்தகம், ஆத்தூர், சுங்கச்சாவடி உள்ளிட்ட முக்கிய சாலைகளை தடுப்பு வேலிகள் கொண்டு அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!