சிறுமியை சீரழித்த திமுக பிரமுகரை போலீஸ் தேடுது

சிறுமியை சீரழித்த திமுக பிரமுகரை போலீஸ் தேடுது
X
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே, 17 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக அலுவலகத்தில் வைத்து சீரழித்ததுடன் அச்சிறுமியை பலருக்கு விருந்தாக்கிய, தி.மு.க. பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பகுதியில் தந்தையை இழந்த 17 வயது சிறுமி தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். இச்சிறுமி எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.

விபரமறியாத இச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி தாம்பரம் சட்டசபை தொகுதி, தி.மு.க., சமூக வலைதள பொறுப்பாளர் தனசேகரன், தன் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிக்கு அமர்த்துவது போல் அமர்த்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமிக்கு மது கொடுத்து தன் நண்பர்களான, கார்த்திக் மற்றும் பனங்காட்டு படை என்ற கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் விருந்தாக படைத்துள்ளார்.

இதனால், சிறுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கற்பமாகி உள்ளார். மேலும் அச்சிறுமியை மிரட்டிய தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

பின்னர் சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி, தொடர்ந்து சிறுமியை பலருக்கு தனசேகரன் விருந்தாக்கி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின்படி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்து வந்துள்ளதாகவும் தனசேகரன் வாயிலாக ஏராளமானோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் மணிகண்டன், கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள தி.மு.க., பிரமுகர் தனசேகரனை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் சிக்குவர் என போலீசார் கூறுகின்றனர். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டால் பொள்ளாட்சி பாலியல் விவகாரத்தை போலவே இவ்வழக்கும் இருக்கும் எனவும், சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வருவதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசாரிடம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!