கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை
X

கும்பகோணம் காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்.

சேலையூரில் வீட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை சேலையூர் அடுத்த ராஜகீழ்பாக்கம், அவ்வையார் தெருவை சேர்ந்தவர் கிருத்திகா(20), இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இன்று துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின்னர் உறவினர்கள் வந்து பார்த்த போது தூக்கில் தொங்கியவாறு இருந்தவரை மீட்டனர். சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!