பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர் நல சம்மேளனம் கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் நல சம்மேளனம் கண்டித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர் நல சம்மேளனம் கண்டனம் தெறிவித்து சங்கத்தின் தலைவர் ரவிராஜா தாம்பரத்தில் செய்தியாளர் சந்தித்து பேசினார்.
அப்போது கூறியதாவது, மத்திய அரசு உடனடியாக விண்ணைத்தொடும் அளவிற்கு ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்.லாரி ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று 6 மாத கால இ,எம்,ஐ தவணை நீட்டிப்பு வழங்க வேண்டும்.ஓட்டுனர்கள் சாலை வரி கட்டுவதற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தினால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விடும்.கேஸ் சிலிண்டரின் விலை தற்போது 850 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. எனவே அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை ஏற்றம் அடைந்துள்ளதால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல் ,சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல் பெட்ரோல் விலை நான்கு ரூபாயும்,டீசல் விலை மூன்று ரூபாய் குறைக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சுங்கச்சாவடிகளையும் நீக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம்.
தமிழக அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களாகியும் சவுடு குவாரி,மணல்குவாரி,கிராவல் குவாரி போன்றவைகளை கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அனுமதி வழங்காமல் இருக்கின்றனர். உடனடியாக நீர்வளம் மற்றும் கனிம துறை அமைச்சர் துரைமுருகன் இதை கவனத்தில் கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றோம் இவ்வாறு கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu