நவீன மாட்டு தொழுவம் அமைத்து தரக் கோரி கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மனு
தாம்பரம் மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு முகாமில் நவீன மாட்டு தொழுவம் அமைத்து தர கோரி கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மனு அளித்தனர்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கத்திலுள்ள அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு, தமிழக குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகள் பங்கேற்று மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வின் இறுதியில் கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் வழக்கறிஞர் தங்க. சாந்தகுமார், மாநில பொதுச்செயலாலர் தீனதயாளன், மாநில பொருளாளர் பி.கார்த்திக் தலைமையில் கூட்டாக மனு ஒன்றினை அளித்தனர்.
அந்த மனுவில், கால்நடை விவசாயிகள் பல தலைமுறைகளாக செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் . இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தபட்டு தற்போது கால்நடைகள் சாலையில் சுற்றி திரிவதாகவும் அப்படி சுற்றி திரியும் மாடுகளை பிடித்து சிறை வைப்பது மட்டுமின்றி அபராதமும் விதிக்கபடும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு விடப்பட்டதை அடுத்து. கால்நடை விவசாயிகள் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதற்கு தீர்வுகாணும் வகையில் கால்நடைகளை பாதுகாக்க கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை கால் நடைகளை வளர்ப்பதற்கு ஒதுக்கி தர வேண்டும். மேலும் நவீன மாட்டு தொழுவம் அமைத்து கால் நடைகளை கட்டி பராமரிக்கவும், பாதுகாக்கவும், பால் உற்பத்தியை பெருக்கவும் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu