குடியிருப்பு பகுதியில் தஞ்சம் அடைந்த மயிலை வனப்பகுதிக்குள் விட கோரிக்கை
சென்னை மாடம்பாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் தஞ்சம் அடைந்த மயில்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் திருமலைநகர் பகுதியில், வீடுகளின் மாடிகளில் இன்று காலை முதல் மயில் ஒன்று சுற்றித் திரிந்தது.
பின்னர் அங்கு இருந்த வேப்பமரத்தின் மீது சென்று அமர்ந்தது. இதனை கண்ட காகங்கள் ஒன்று கூடி மயிலை மாறி மாறி கொத்தி விரட்டின. மிகவும் சோர்வாக காணபட்ட அந்த மயில் தத்திதத்தி சிறிதளவு பறந்து பக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் சென்று அமர்ந்து கொண்டது. இந்த மயிலை கண்ட மக்கள், மயில் வந்திருக்கு மயில்வந்திருக்கு என மகிழ்ச்சியில் பார்த்து ரசித்தனர், பின்னர் கைபேசியில் புகைபடம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதற்குள்ளாக மயில் அடுத்த வீட்டு மாடிக்கு தாவி குதித்து சென்றது. இறகுகள் பலவீனமாக இருப்பதால் நீண்டதூரம் பறக்க முடியாமல் குடியிருப்பு பகுதியில் தஞ்சமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.குடியிருப்பு பகுதியில் சிக்கி தவிக்கும் மயிலை வனத்துறையினர் பிடித்து வனபகுதில் விட வேண்டும் என பகுதிவாசிகள் கோரிகை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu