தாம்பரம் மாநகராட்சியில் மேல்நிலை தேக்க தொட்டி தண்ணீர் வீணாகும் அவலம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் நுாத்தஞ்சேரி பகுதியில் வீணாகும் தண்ணீர்
tambara
Overhead Tank - தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட, மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி குளக்கரை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தினந்தோறும் நிரப்பப்படும் நீரை, தொட்டி நிறைந்த உடன் மோட்டரை அணைக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் நீர் வீணாக கீழே மழைபோல் கொட்டுகிறது.
மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் சிதிலமடைந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து காங்கீரிட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு ஆபத்தான நிலையில் உள்ளது.ஆகவே மாநகராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சரி செய்து குடிநீரை வீணாக்காமல் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu