/* */

ஓபிஎஸ் கைது கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒபிஎஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

ஓபிஎஸ்  கைது  கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஓபிஎஸ் கைது கண்டித்து அதிமுகவினர் போராட்டம்

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப்பல்கலைக் கழகத்துடன் இணைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல்செய்யப்பட்டது.

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைகழத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலைவாணர் அரங்கம் முன்பாக சாலைமறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனை கண்டிக்கும் வகையில், நேற்று சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராசேந்திரன் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து பேசினார்.

இதில் முன்னாள் நகரமன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Sep 2021 10:24 AM GMT

Related News