தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் வசந்த் & கோவின் 100வது கிளை திறப்பு

தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் வசந்த் & கோவின் 100வது கிளை திறப்பு
X

தாம்பரத்தில் வசந்த் அண்டு கோவின் நூறாவது கிளை திறக்கப்பட்டது.

தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் வசந்த் & கோவின் 100வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் வசந்ந் ஆண்ட் கோ கிளைகள் உள்ளன. இந்தநிலையில் 100வது கிளையின் திறப்பு தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் நடைபெற்றது.

புதிய கிளையை விஜிபி நிறுவனர் சந்தோஷம், நிர்வாக இயக்குனர் விஜய் வசந்த் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். அதனை தொடந்து வசந்த் ஆண்ட் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்செல்வி, இயக்குனர்கள் தமிழ்மலர், வினோத் குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

பின்னர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுபினரும், வசந்த் ஆண்ட் கோ நிர்வாக இயக்குனருமான விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, 1978 ஆண்டு சிறிய கடையாக திநகரில் ஆரம்பிக்கப்பட்ட வசந்த் ஆண்ட் கோ இன்று 100வது கிளையை தொடங்கி உள்ளது.

வசந்தகுமாரின் கனவு 100 கிளையை தொடங்கவேண்டும் என்பது.அந்த கனவு இன்று நிறைவேறி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிதி ஆண்டுக்குள் மேலும் 50 கடைகள் திறக்கவேண்டும் என்பது எங்களது இலக்கு. அதன்படி 2022க்குள் 150 கடையாக வசந்த் ஆண்ட் கோ உயரும்

இந்த 100 கிளைப்திறப்பு விழாவை முன்னிடு பல்வேறு சலுகைகள் வழஙகப்பட்டுள்ளது. அதன்படி 100 டிவி, மிக்சி, பேன், என பல்வேறு சலுகை குழுக்கல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என் விஜய் வசந்த் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!