வெளிப்படையாக நடந்த ஆசிரியர் கலந்தாய்வு: முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி

வெளிப்படையாக நடந்த ஆசிரியர் கலந்தாய்வு: முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி
X

 செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு.தியாகராஜன்

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

ஆசிரியர் கலந்தாய்வு பணியிடங்கள் ஒளிவு மறைவின்றி, அரசியல் தலையீடு இல்லாமல் நடைபெற்றதாக ஆசிரியர் சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான கலந்தாய்வு, தாம்பரம் அடுத்த கார்லி பள்ளியில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறையில் வரலாற்றில் எந்த ஒரு பணியிடமும் மறைக்கபடாமல் ஒரு ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு என்பது இந்த ஆண்டு தான் பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடியக்கூடிய தருவாயில் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு காலி பணியிடமும் குறிப்பாக தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி தேர்தல் அறிக்கையிலே ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்தப்படும் என்று அவர் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தி அதன் விளைவாக அமைச்சர் கவனம் எடுத்து எந்தவொரு அரசியல், துறை ரீதியாகவோ மறைக்கப்படாமல் அத்துனையும் காண்பித்து நடத்தக்கூடிய கலந்தாய்வாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர் பெருமக்கள் தங்களுடைய ஊருக்கே எந்த வித பைசா கூட இல்லாமல் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் பெற்று சென்று கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஆசிரியர் இனம் மிகுந்த மகிழ்ச்சியிலேயெ இருந்து கொண்டிருக்கிறது. சொன்னதை செய்திருக்கிறார் முதல்வர் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் கு.தியாகராஜன் முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future