செங்கல்பட்டு: கொரோனாவை வரவேற்கும் பேருந்து பயணம்
செங்கல்பட்டில் சமூக இடைவெளி இல்லாத பேருந்து பயணம் காரணமாக கொரோனா அதிகரிக்கும் அபாயம்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்பு ஒரு மாதங்களுக்குப் பிறகு கடந்த 21-ம் தேதி இன்று முதல் ஊரடங்கு தளர்வு அறிவிப்பு காரணமாக செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், மாமல்ல்புரம், மதுராந்தகம், காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அதில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 50 சதவீதப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை முதல் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து நகர மற்றும் கிராமப் பகுதிகளுக்கு 50 சதவீதப் பயணிகளுடன் 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த அரசுப் பேருந்துகளில் ஆரம்பத்தில் ஒரு சில மணி நேரம் மட்டும் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றி 100 சதவீதத்துக்கும் மேலாக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
குறிப்பாக செங்கல்பட்டு – காஞ்சிபுரம், மதுராந்தகம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாகப் பயணிகள் ஏற்றப்படுகின்றனர். இதனால் அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் பயணிகள் ஒருவரை ஒருவர் உரசியபடி பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனை முன்னிட்டு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu