மாம்பாக்கத்தில் புதிய எச்.டி.பி.சி.வங்கி கிளை திறப்பு
மாம்பாக்கத்தில் புதிய எச்.டி.பி.சி.வங்கியின் கிளையை திறந்து வைத்த தாகூர் கல்வி குழும தலைவர் மாலா.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் உள்ள மாம்பாக்கத்தில் எச்.டி.எப்.சி. வங்கியின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. மாம்பாக்கம் புதிய கிளையை தாகூர் மருத்துவ கல்லூரி குழும தலைவர் மாலா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஜெய் ஸ்கேன் நிறுவனர் டாக்டர் சரவணன் குத்து விளக்கு ஏற்றினார்.
அதன்பின்னர் வங்கி தலைமை அதிகாரி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியளவில் தனியார் வங்கியில் எச்.டி.எப்.சி. வங்கி முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 372 வங்கிகள் உள்ளன. இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் மேலும் 150 வங்கி கிளை திறப்பதே எங்களது இலக்கு. அடுத்தாண்டுக்குள் தமிழகத்தில் 500 எச்.டி.எப்.சி. வங்கிகள் திறக்கப்படும். கடன் எளிமையான முறையில் இணைதளம் மூலமாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கபடுகிறது.
அதிகமாக எ.டி.எம். இயந்திரஙகளும் தமிழகத்தில் உள்ளன. அதேபோல் தானியங்கி பணம் செலுத்தும் வசதியும் அனைத்து மையங்களில் இருப்பதாகவும், வாடிக்கையாளரின் சேவையை முழுமயாக பூர்த்தி செய்வதே எங்களது நோக்கம் என தலைமை அதிகாரி பாலாஜி தெரிவித்தார்.
திறப்பு விழாவில் சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன், குடந்தை ஆர்.கே.ரமேஷ் தேவர், குரோம்பேட்டை பில்டர் எஸ்.டி.தியாகராஜன் மற்றும் மாம்பாக்கம் வங்கி கிளை மேலாளர் ஆல்பர்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu