தாம்பரம் அருகே தேசிய அளவிலான மாற்று திறனாளிகள் கிரிக்கெட் போட்டி
தாம்பரம் அருகே மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சந்தோசபுரத்தில் தமிழ்நாடு மாற்றுதிறனாளிகான கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உலக மாற்றுதிறனாளி தினத்தை முன்னிட்டு தேசிய அள்விலான கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
இந்தநிலையில் முதல் ஆட்டமான தமிழ்நாடு - பாண்டிசேரி இடையே நடைபெறும் போட்டியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்
மாற்றுதிறனாளிகளின் கிரிக்கெட் விளையாட்டிற்கான அங்கீகாரம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய அங்கீகாரம் வழஙகப்ப்டும் என்றார்.
மேலும் தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு கிராமபொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும், குறிப்பாக தடகளம், கபடி மற்றும் அந்தந்த கிராம பகுதிகள் விளையாடும் விளையாட்டுகளையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு பிரபு, மாற்றுதிறனாளிகள் சங்க தலைவர் கோபிநாத், பொதுசெயலாளர் நெப்போலியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu