/* */

இரயில் பயணிகளிடம் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் கைது

இரயில் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கில்லாடி திருடன் கைது செய்யப்பட்டு 26 செல்போன்கள் மீட்பு

HIGHLIGHTS

இரயில் பயணிகளிடம் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் கைது
X

தாம்பரத்தில் கைது செய்யப்பட்ட செல்போன் திருடன்

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் கடந்த 5ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கும் போது செல்போன் திருடப்பட்டதாக தாம்பரம் ரயில்வே நிலையத்தில் உள்ள போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து டிக்கெட் கவுண்டர் அருகே இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் கூட்டத்தோடு கூட்டமாக டிக்கெட் வாங்குவது போல இரண்டு பேரிடம் இருந்து செல்போனை திருடிக்கொண்டு தப்பிக்கும் காட்சி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது .

இதனடிப்படையில், தாம்பரம் ரயில்வே போலீசார் திருடணை தேடிவந்தனர். அப்போது மீண்டும் செல்போனை திருடுவதற்காக தாம்பரம் டிக்கெட் கவுண்டரில் நின்று கொண்டு இருந்தான். அப்போது ரயில்வே போலீசார் அந்த நபரை பார்த்தவுடன் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த உருவமும் ஒன்றாக இருந்தது தெரிய வந்தது.

உடனே திருடனை பிடித்து விசாரணை செய்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த அவன் பெயர் சாப்ளா மேன்டல், என்றும், ரயில் நிலையங்களில் தொடர்ச்சியாக விலையுயர்ந்த செல்போன்களை திருடியதும் தெரியவந்தது. அவரிடமிருந்து விலை உயர்ந்த 26சல்போன்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 Sep 2021 9:40 AM GMT

Related News