ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் மினி மாரத்தான் போட்டி: பெற்றோர்கள் வாக்குவாதம்
சென்னை தாம்பரத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் 3வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகமாக இளம் வயது மாணவர்கள் கலந்து கொண்டனர். 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என தனிதனியாக 10 கிலோ மீட்டர் ஓடவிடப்பட்டனர். அதே போல் 14, 12 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 3 கிலோ மீட்டர், 16, 18 வயதிற்கு ,கீழ் 5 கிலோ மீட்டர் என பல கட்டங்களாக மாணவர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் பெற்றோர்கள் உட்பட சுமார் 1000 பேர் கலந்து கொண்டு ஓடியது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக அனைத்து பிரிவிலும் 3 பரிசுகள் வழங்கப்பட்டது, பரிசுகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழங்கினார். நிகழ்வில கலந்து கொள்ள ஒவ்வொருவரிடமும், 300 ரூபாய் வசூலிக்கப்பட்டது, ஆனால் சரிவர ஏற்பாடுகளை செய்யவில்லை, ஓடி முடிந்து வரும் மாணவர்கள், சிறுவர்களுக்கு போதிய முதலுதவிகளை பின்பற்றாமல் இருந்ததாகவும், யார் முதல் மூன்று இடங்களை பிடித்தார்கள் என்பதை கவனிக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு பரிசுகளை வழங்கியதாக போட்டி ஏற்பாடு செய்தவர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu