நாயை கல்லால் அடித்த நபர் மீது இராணுவ அதிகாரி காவல் நிலையத்தில் புகார்

நாயை கல்லால் அடித்த நபர் மீது இராணுவ அதிகாரி காவல் நிலையத்தில் புகார்
X
நாய் மீது கல் வீசப்பட்டது பற்றிய சி.சி.டி.வி. காட்சி.
நாயை கல்லால் அடித்த நபர் மீது இராணுவ அதிகாரி பீர்க்கரன் கரணை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, பாலாஜி அவென்யூவில் வசித்து வருபவர் வெங்கடேஷ், இவர் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே நாய்களுக்கு உணவு வைப்பதை வாடிக்கையாக கொண்டவர். செல்ல பிராணிகள் மீது அன்பு கொண்டவர். இவரது வீட்டு பக்கத்தில் வசிக்கும் மணி மற்றும் அவரது மனைவி ரஞ்சினி இவரை மறைமுகமாக பேசி திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 18ம் தேதி தெருவில் படுத்திருந்த நாய் ஒன்றை மணி கல்லால் அடித்து தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி.மேகராவில் பதிவாகியுள்ளது.

பதிவான சி.சி.டி.வி. காட்சிகளோடு பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் இராணுவ அதிகாரி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!