ரோட்டில் கொட்டப்படும் மாமிசக்கழிவு: பொதுமக்கள் முகம் சுளிப்பு

ரோட்டில் கொட்டப்படும் மாமிசக்கழிவு: பொதுமக்கள் முகம் சுளிப்பு
X

பம்மலில், சாலையில் கொட்டப்படும் மாமிசக் கழிவுகள். 

பம்மல் பகுதியில் பொது இடத்தில் கொட்டப்படும் மாமிசக்கழிவுகளை, உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் பகுதியில், பல்வேறு பொது இடங்களில் மாமிச கழிவுகள் சட்ட விரோதமாக சமூக விரோதிகள் சிலர், இரவு நேரங்களில் கொட்டுகின்றனர். அண்மை காலமாக அதிகரித்து வரும் இத்தகைய செயல்களால், முக்கியமாக பம்மல் பகுதிகுட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மக்கள், கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

துர்நாற்றம் வீசுவதால், பெண்கள், முதியவர், சிறுவர்கள் என அனைத்து தரபினரும் அப்பகுதியை கடந்து செல்லும் போது சங்கடப்படுகின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள்தால், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்; இறைச்சி கழிவு கொட்டுவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil