பயன்பாட்டில் இல்லாத தொழுநோய் மருத்துவமனை: சென்னை மேயர் ஆய்வு

பயன்பாட்டில் இல்லாத தொழுநோய் மருத்துவமனை: சென்னை மேயர் ஆய்வு
X
மாடம்பாக்கத்தில் பயன்பாட்டில் இல்லாத தொழுநோய் மருத்துவமனையை சென்னை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

மாடம்பாக்கத்தில் பயன்பாட்டில் இல்லாத தொழுநோய் மருத்துவமனையை சென்னை மேயர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் 30 ஏக்கர் நிலம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலம் 1946 ல் அழகப்பா செட்டியார் என்பவர் சென்னை மாநகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இதுவரை இந்த இடத்தில் எவ்வித கட்டுமானமும் இல்லை, இதை தொழுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இங்கு சிறிய தொழுநோய் மருத்துவமனை கட்டப்பட்டது, தற்போது அது பயன்பாட்டில் இல்லை. அதனால் இந்த இடத்தை இன்று சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த இடத்தில் சுகாதாரம் சார்ந்து என்ன செய்ய முடியும் என்பதை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!