செங்கல்பட்டில் ரயிலில் தவறவிட்ட தங்க நகை பை : ஒரு மணி நேரத்தில் மீட்பு

செங்கல்பட்டில்  ரயிலில் தவறவிட்ட தங்க நகை பை : ஒரு மணி நேரத்தில் மீட்பு
X

ரயிலில் தவறவிட்ட தங்க நகை பையை 1 மணி நேரத்தில் ரயில் பயணியிடம் மீட்டு தந்த ரயில்வே போலீசார்.

செங்கல்பட்டில் ரயிலில் தவறவிட்ட தங்க நகை பையை ஒருமணி நேரத்தில் மீட்டு உரியவரிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

மதுரையிலிருந்து தாம்பரம் வந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் செங்கல்பட்டில் தவறவிட்ட தங்க நகைகள்,பணம் இருந்த பையை ஒரு மணி நேரத்தில் ரயில்வே போலீசாா் மீட்டெடுத்து பயணியிடம் ஒப்படைத்தனா்.

மதுரை மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்(45). இவருடைய மனைவி அன்னலட்சுமி(40). இவா்கள் தங்கள் உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்ள செங்கல்பட்டிற்கு, மதுரை-தாம்பரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு வந்தனா்.

இன்று காலை ரயில் செங்கல்பட்டு வந்ததும் ரயிலை விட்டு இறங்கினா்.அப்போது அவா்களின் பை ஒன்றை எடுக்காமல் ரயிவில் தவறவிட்டது தெரியவந்தது. அதற்குள் ரயில் புறப்பட்டு தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இவா்கள் ரயிலில் தவறவிட்ட பையில் பணம்,தங்க நகை இருந்தன.

இதனால் அதிா்ச்சியடைந்த தனசேகரன்,அன்னலட்சுமி,உடனடியாக செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் நிலையம் சென்று புகாா் செய்தனா்.ரயில்வே போலீசாா் புகாரை பெற்றுக்கொண்டு, இவா்கள் பயணம் செய்த கோச் எண், சீட் எண்களை கேட்டனா்.இவா்கள் D 3 கோச்சில்,சீட் எண் 92,93 பயணித்ததாக கூறினா்.

இதையடுத்து செங்கல்பட்டு ரயில் போலீசாா்,அவசரமாக தாம்பரம் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனா்.உடனடியாக ரயில்வே போலீஸ், தாம்பரத்தில் 6 வது பிளாட்பாரத்தில் வந்து நின்றிருந்த மதுரை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலில் D 3 கோச்சில் ஏறி சோதணையிட்டனா். அங்கு அவா்கள் பயணித்த சீட்டில் ஒரு பை கேட்பாரற்று இருந்தது.இதையடுத்து அந்த பையை எடுத்துக்கொண்டு, தாம்பரம் ரயில்வே போலீஸ்நிலையம் வந்தனா்.அதோடு ரயில் பையை தவறவிட்ட தம்பதிக்கு தகவல் கொடுத்தனா்.

உடனடியாக தாம்பரம் ரயில்வே போலீஸ் நிலையம் வந்த தம்பதியினா்,ரயில் தாங்கள் தவறவிட்ட பையை அடையாளம் காட்டினா்.அந்த பைக்குள் பணம் ரூ.3 ஆயிரம்,தங்க மோதிரங்கள்,அவா்களுடைய ஆதாா் அடையாள அட்டைகள் இருந்தன.

இதையடுத்து ரயில்வே போலீசாா் அவா்களிடம் எழுதி வாங்கிவிட்டு,பணம் நகையை கொடுத்தனுப்பினா்.ரயிலில் தவறவிட்ட பையை, ஒரு மணி நேரத்தில் ரயில்வே போலீசாா் கண்டுப்பிடித்து கொடுத்ததால், போலீசாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!