தாம்பரத்தில் சற்றே குறைப்போம், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் நிகழ்ச்சி
தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நடந்த சற்றே குறைப்போம், உணவை வீணாக்காமல் பகிர்வோம் நிகழ்ச்சயில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன், மா.சுப்ரமணியன் ஆகியோர் விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் சற்றே குறைப்போம், உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் விழிப்புணர்வு பதாகை வெளியீட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் மருத்துவர் ஜே. ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் முனைவர் செந்தில்குமார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர் ராகுல்நாத், மருத்துவக்கல்வி இயக்குனர் மருத்துவர் நாராயணபாபு, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்வி முதல்வர் மருத்துவர் பாலாஜி, அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதர், நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu