தாம்பரம் இருதய நோய் மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையம் துவக்கம்

தாம்பரம் இருதய நோய் மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையம் துவக்கம்
X

நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் சுப்பிரமணியன்.

தாம்பரம் அரசு இருதய நோய் மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நுரையீரல் மறுவாழ்வு சிகிச்சை மையத்தை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அரசு செயலர் மருத்துவர் ராதாகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் முனைவர் செந்தில்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எ.ஆர்.ராகுல் நாத், மருத்துவ கல்வி இயக்குனர் மருத்துவர் நாராயண பாபு, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்வி முதல்வர் மருத்துவர் பாலாஜி, அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீதர், நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா மற்றும் உயர் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil