பட்டபகலில் கடையில் புகுந்து லேப்டாப் திருட்டு

பட்டபகலில் கடையில் புகுந்து லேப்டாப் திருட்டு
X

லேப்டாப்பை திருடிச் செல்லும்போது பதிவாகியுள்ள சிசிடிவி காட்சி.

பட்டபகலில் ஆள் இல்லாத கடையில் புகுந்து மர்ம நபர் லேப்டாப்பை திருடிச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில், செல்போன் மற்றும் லேப்டாப் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வருபவர் எட்வின். இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக கடையை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர் ஒருவர், பட்டபகலில் கடைக்குள் புகுந்து லேப்டாப்பை திருடிச் சென்றுள்ளார்.

கழிவறைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது, கடையில் இருந்த லேப்டாப் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கடையின் உரிமையாளர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள கடையில் சிசிடிவி காட்சிகளை கடையின் உரிமையாளர் பார்த்த போது, சிவப்பு டி-சர்ட் அணிந்து கொண்டு வரும் மர்ம நபர் நோட்டமிட்டு லேப்டாப்பை திருடிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனை கைப்பற்றி சேலையூர் போலீசார் லேப்டாப் திருடனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!