பெருங்களத்தூர் அருகே தனியார் பயிற்சி மையத்தின் கராத்தே சாகச நிகழ்ச்சி
பெருங்களத்தூர் அருகே கராத்தே சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், எஸ்.எஸ்.எம்.நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கிரசண்ட் டாங் சூடு கொரியன் மார்சல் ஆர்ட்ஸ் என்ற பெயரில் கடந்த 17 வருடங்களாக கராத்தே பயிற்சியினை அளித்து வருகின்றனர். பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட 15 இடங்களில் கராத்தே பயிற்றுவித்து வருகின்றனர். இதனை தீபன் கார்த்திக் என்பவர் தலைமையேற்று நடந்து வருகிறார். 30 மாஸ்டர்களை கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 250 பேருக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.
இன்று பயிற்சி பெற்று வந்த 250 பேரும் அவரவர் பயிற்சிக்கேற்ப வெவ்வேறு படி நிலைகளில் இருந்து முன்னேறி வெள்ளை, மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, நீலம், ஊதா, காவி, பிளாக் பெல்ட் பெற்றனர். குறிப்பாக 7 பேர் பிளாக் பெல்ட் பெற்று மாஸ்டர்களாக தேர்வாகினர்.
மாஸ்டர்களாக தேர்வானதில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சனா(13), என்பவர் இருந்தார், அவர் 2ம் வகுப்பு முதலே தோழி ஒருவரை பார்த்து தற்காப்பு கலையான கராத்தே கற்க ஆசைப்பட்டு பெற்றொரிடம் தெரிவித்ததின் பேரில் இதில் சேர்த்து விட்டுள்ளனர். 7 வருட பயிற்சி முடித்து இன்று சஞ்சனாவோடு சேர்ந்து 7 பேர் பிளாக் பெல்ட் பெற்றனர்.
மாஸ்டர்களான இவர்கள் முன்சங்க், சிலம்பம் சுற்றுவது, கட்டா, வயிற்றில் ஆணி படுக்கை வைத்து இருசக்கர வாகனம் ஏற்றுவது, ஆணிபடுக்கையை வைத்து மேலே பாறை உடைப்பது, கை விரல்களில் காரை ஏற்றுவது, எரியும் ஓட்டை உடைப்பது உள்ளிட்ட சாகசங்கள் செய்து காண்பித்தனர். இறுதியாக இவர்களுக்கு அவரவர் படிநிலைக்கேற்ப பெல்ட்டுகளும் சான்றிதழ், கோப்பைகளும் வழங்கப்பட்டது. சிறந்து விளங்கியவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu