'கணவர் வேலைக்குசென்றால் குழந்தைக்கு கொரோனா வரும்':பயத்தில் பெண் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை காமராஜர் நகரை சேர்ந்தவர் ராமசந்திரன் (32). சாப்ட்வோ் இன்ஜினியரான இவா் செங்கல்பட்டு அருகே ஒரு தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றிவருகிறாா். இவரது மனைவி திவ்யபாரதி (29).இவா்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் தாம்பரம், பெருங்களத்தூா்,பீா்க்கன்காரணை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டு,உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இதனால் திவ்யபாரதி கணவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினாா். ஆனால் ராமச்சந்திரன், நான் காரில் பாதுகாப்பாகவே செல்வதால் பாதிப்பு ஏற்படாது என்று கூறிவிட்டு தொடா்ந்து பணிக்கு சென்றாா்.
தளா்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு இந்த வாரத்தில் அமுல்படுத்தியுள்ளது. அதோடு தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது என்ற செய்திகளும் அதிகமாக வந்தது. இதை திவ்யபாரதி கணவரிடம் சுட்டிக்காட்டி,இனிமேல் வேலைக்கு போகவே கூடாது. உங்களால் நமது குழந்தை பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறி சண்டைப்போட்டாா்.
ஆனால் ராமச்சந்திரன் வேலைக்குப்போகும் தனது முடிவில் உறுதியாக இருந்தாா். இன்று காலை மனைவி தடுத்ததையும் மீறி ராமச்சந்திரன் வேலைக்கு புறப்பட்டு சென்றாா். இதையடுத்து ஆத்திரமடைந்த திவ்யபாரதி வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காலையில் நீண்ட நேரமாக திவ்யபாரதி வெளியே வரவில்லை. அவா்களின் 4 குழந்தை மட்டும் வீட்டில் அழுது கொண்டிருப்பதை பக்கத்து வீட்டினா் கவனித்தனா். இதையடுத்து அவா்கள் சென்று பாா்த்தபோது,திவ்யபாரதி தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தாா். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.
பீா்க்கன்காரணை போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். அதோடு மனைவி தூக்கிலிட்டுக்கொண்ட தகவல் அறிந்து வந்த கணவா் ராமச்சந்திரனிடம் போலீசாா் விசாரணை நடத்துகின்றனா். அதோடு இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் வழக்கை தாம்பரம் ஆர்.டி.. விசாரணைக்கு போலீசாா் ஒப்படைத்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu