கணவன் விபத்தில் மரணம், மனைவி தற்கொலை, ஆதவற்ற நிலையில் குழந்தைகள்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் அம்பேத்கர் நகர் 5வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தவர் நிதா. இவரது கணவர் மனோஜ்குமார் இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி பணிக்குச் சென்ற இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவரை பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார்.
கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அவதி அடைந்து வந்த மனைவி நிதா நேற்று இரவு உணவு சமைத்து அதில் விஷம் கலந்து தனது குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு தானும் உண்டுள்ளார்.
சிறிது நேரத்தில் நிதா வாந்தி எடுக்கவே மகன் யோகேஷ் பெரியப்பாவிற்கு செல்போனில் விவரத்தைச் சொல்ல பெரியவர்கள் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் நிதா இருந்ததால் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
குழந்தைகள் இருவரையும் எழும்பூரில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்கள் நன்றாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கணவரை பிரிய மனமில்லாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்து குழந்தைகளோடு விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மனைவி மட்டும் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளும் பெற்றோர் இல்லாமல் நிற்கதியாய் நிற்பது அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu