தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு

தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை: மர்ம நபருக்கு வலைவீச்சு
X

வீட்டு பொருட்களை மர்ம நபர் ஆட்டோவில் திருடி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தாம்பரம் அருகே பட்டகலில் வீடு புகுந்து திருடி சென்ற நபரால் பரபரப்பு. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சானடோரியம் அமரர் ஜீவா தெருவில் சுமார் 4,வருடங்களாக வீடு வாடகை எடுத்து வசித்து வருபவர், உமர் பாரூக் (வயது-30). இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செய்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை ஜன்னலில் வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார்,நேற்று மாலை வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது விட்டினுள் வைத்திருந்த 42, இன்ச் எல்.இ.டி டிவி விலையுயர்ந்த லாப்டாப், சிலிண்டர், ஐயன் பாக்ஸ் உள்ளிட்ட பெருட்கள் காணமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்,புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்க்கு சென்ற போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பார்த்த போது தனி ஒருவனாக ஆட்டோவில் வரும் நபர் ஒருவர் ஜன்னலில் வைக்கபட்டிருந்த சாவி மூலமாக திறந்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது. பட்டப்பகலில் ஆட்டோ மூலமாக வீட்டையே காலி செய்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!