ஆன்லைன் மூலம் கருப்பு பூஞ்சை மருந்து விற்பனை: அரசு மருத்துவமனை ஊழியா்கள் 2 போ் கைது..!
சென்னை புறநகா் பகுதிகளில் ஆன்லைன் மூலம் கள்ளச்சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை விற்பனை செய்த,அரசு மருத்துவமனை ஊழியா்கள் மேலும் 2 போ் தாம்பரத்தில் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து கரும்பூஞ்சை நோய்க்கான மருந்தை ஆன்லைனில் விற்பனை செய்து தாம்பரத்தில் கைதானவா்கள் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்துள்ளது.
சென்னை புறநகா் பகுதிகளில் ஆன்லைன் மூலம் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு ஒரு கும்பல் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து சென்னை தாம்பரம் போலீசின் தனிப்படையினா் இதை தீவிரமாக கண்காணித்தனா்.
அப்போது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சோ்ந்த சரவணன் உட்பட 5 பேரை தனிப்படை போலீசாா் கடந்த சனிக்கிழமை அதிகாலை செய்தனா்.சரவணனின் HYLO என்ற ஆன்லைன் இணையதளத்தில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வது போல் வடிவமைத்து, அதில் கருப்பு பூஞ்சைக்கான மருந்து இருப்பதாக பதிவிட்டு, கள்ளச்சந்தையில் ரூ.36,000 வரை விற்பனை செய்துள்ளனா் என்று தெரியவந்தது.அதோடு அவா்களிடமிருந்து பணம் மற்றும் கருப்பூஞ்சை நோய்க்கான மருந்துகளையும் பறிமுதல் செய்தனா்.பின்பு அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்துள்ளனா்.
இந்நிலையில் தாம்பரம் தனிப்படை போலீசாா் மேலும் தொடா்ந்து விசாரணை நடத்திவந்தனா்.இந்நிலையில் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த பணியாளா்களாக பணியாற்றும் தாம்பரத்தை சோ்ந்த சிரஞ்சீவி(38), பிரசாந்த்(26) ஆகிய இருவரை தனியாா் மருத்துவமனை அருகே வைத்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து கரும்பூஞ்சை மருந்து பாட்டில்கள் மற்றும் பணம் ரூ.ஒரு லட்சத்தையும் பறிமுதல் செய்தனா். அவா்கள் இருவரையும் இன்று காலை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu