கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்

கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த  7 கிலோ கஞ்சா பறிமுதல்
X

சென்னையில் மாணவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றிய கஞ்சா பொட்டலங்கள்

சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறையில் 7 கிலோ கஞ்சா பறிமுதல், தப்பியோடிய மாணவர்களை தேடும் போலீஸார்

சென்னை தாம்பரம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் அறையில் வைத்திருந்த ஏழு கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீசை கண்டதும் தப்பியோடிய இருவர் கைது.

தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் ரோந்து போலீசாரை கண்டதும் ஒரு நபர் தப்பி ஓடி இருக்கிறார். சந்தேகப்படும் படி இருந்ததால், அவரை ரோந்து போலீசார் விடாமல் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்த போது அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

அவரை சேலையூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது கேரள மாநிலத்தை சேர்ந்த ஜித்தன் மோகன்(23), என்பதும் இவர் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கஞ்சா வாங்கி வந்த இடம் குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், திருமுடிவாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனிப்படை போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்து இரண்டு பேர் தப்பிச் சென்று விட்டனர். கேரளாவை சேர்ந்த துஷ்கர்(23), என்பவரை மட்டும் கைது செய்து கல்லூரி மாணவர்கள் அறையிலிருந்து 6.5 கிலோ கஞ்சா என மொத்தம் 7 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பியோடிய சென்னை தனியார் கல்லூரி மாணவர்களான எம்.ஏ. படித்து வரும் பிரபாகரன்(23), மற்றும் பி.எஸ்.சி. படித்து வரும் அரவிந்த் சகி(23), ஆகிய இருவரை சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து எளிதில் விற்பனை செய்து வந்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!