தாம்பரம், செங்கல்பட்டு இடையே சாலையை கடக்க நடைபாலம் : இந்திய நெடுஞ்சாலை துறை ஆணையம்
போக்குவரத்து நெரிசலில் தாம்பரம் செங்கல்பட்டு சாலை ( பைல் படம்)
சென்னையின் வளர்ச்சிக்கு இணையாக புறநகர் பகுதியான தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை தற்போது அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் தொழில்நுட்ப வளங்கள் என பல வகைகளில் தொழில் சார்ந்தவர்கள் இங்கு குடியேறி வருகிறார்கள்.
தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக தாம்பரம் இயங்கி வருகிறது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழாக்காலங்களில் தொடர் விடுமுறைகளில் போது சாலைகளில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே ரயில் பாதைகளும் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார்கள் இந்த நிலையில், இந்த சாலையை விரிவாக்கம் செய்தால் மற்றும் முக்கிய இடங்களான பெருங்களத்தூர் பொத்தேரி மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி பிரதமர் அலுவலகத்திற்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவர் கோரிக்கை மனு கடந்த 2019 ம்-ஆண்டு மின்னஞ்சலில் அனுப்பினார். தற்போது அந்த மின்னஞ்சலுக்கு இந்திய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஆறு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பெருங்களத்தூர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து பொதுமக்கள் சாலையை கடக்க வழி வகை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் பொத்தேரி மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான திட்ட மதிப்பீட்டு பணி துவங்கி உள்ளதாகவும் விரைவில் இந்த சாலை நெரிசலின்றி பாதசாரிகள் விபத்தின்றி கடக்க வழிவகை செய்யப்படும். என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்த பகுதி மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பாக பெருங்களத்தூரில் இருந்து மறைமலைநகர் வரை அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறுவதாகவும் பாதசாரிகள் கவனக்குறைவாக கடப்பதும்,
இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும்போது விபத்தில் சிக்குவது என பல வகைகளில் உயிரிழப்பு ஏற்படுவது வருகிறது.
இந்த நிலையில் பாதசாரிகள் கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலைக்கு செல்லும் நபர்கள் என பல வகையினர் விபத்தின்றி சாலையை கடக்க இதுபோன்ற திட்டங்கள் பெருமளவில் உதவும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே தற்போது நடைபெற்றுவரும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, நடைபாதை மேம்பாலங்களை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu