உதயநிதி திரைப்படத்தின் முதல் காட்சி: முன்களப்பணியாளர்களுக்கு மூக்குத்தி பரிசு
பெண் துப்புரவு ஊழியர்களுக்கு தங்க மூக்குதியினை தாம்பரம் மாநகராட்சி 23வார்டு உதயநிதி நற்பணி மன்றம் பல்லாவரம் நகர பொருளாளர் ஜெ.கமல கண்ணன் வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் நடிபில் வெளியாகியுள்ள நெஞ்சுக்குநீதி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற தமிழகம் முழுவதும் உதயநிதி நற்பணி மன்றம் சார்பில் பிரமாண்ட கட்டவுகள் வைக்கப்பட்டு ரசிகர்களுக்கு டிக்கெட்களை பரிசாக வழங்கி உற்சாக மிகுதியில் மேளதாளத்துடன் முதல் காட்சியை கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 23 வார்டு உதயநிதி நற்பணி மன்றம் பல்லாவரம் நகர பொருளாளர் ஜெ.கமலகண்ணன் தலைமையில், சிட்லப்பாக்கம் வரதராஜா திரையரங்கு முன் மேளதாளம் முழங்க சிறுவர்கள் சிலம்பம் சுழற்றி வர முதல் காட்சிக்கு வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
முன்னதாக முன்களப் பணியாளர்களான துப்புரவு ஊழியர்கள் 50 பேருக்கு மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி மரியாதை அளிக்கபட்டது. அதில் 30க்கும் மேற்பட்ட பெண் துப்புரவு ஊழியர்களுக்கு தங்க மூக்குதியினை தாம்பரம் மாநகராட்சி 23வார்டு உதயநிதி நற்பணி மன்றம் பல்லாவரம் நகர பொருளாளர் ஜெ.கமல கண்ணன் வழங்கினார். அப்போது உடன் வெங்கடேசன் புனித தோமையர் மலை வடக்கு ஒன்றியம் தலைவர்மற்றும் நிர்வாகிகள் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu