'வெற்றி மாலை சூட' மாலை கட்டிய அதிமுக வேட்பாளர்

வெற்றி மாலை சூட  மாலை கட்டிய அதிமுக  வேட்பாளர்
X
அதிமுக வேட்பாளர் டி.கே.எம். சின்னையா மாலை கட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா மாடம்பாக்கம் பேரூராட்சி சுதர்சன் நகர், கூத்தன்சேரி, எல்.எஸ்.நகர், வேலபுரிஸ்வரர் கோயில் பகுதி, கோழி பண்ணை, யஸ்வந்த் நகர் உள்பட 15 வார்டுகளில் ரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூ கடையில் மாலை கட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மக்கள் மத்தியில் சின்னையா பேசுகையில், 'சென்னை புறநகர் பகுதியான மாடம்பாக்கம் பகுதியில் இன்றைக்கு பல புதிய குடியிருப்புகள் உருவாகி வருகிறது. இந்த பகுதிகளில் திறந்தவெளி பகுதிகளாக கிடக்கும் இடங்களில் பூங்கா அமைத்து கொடுப்பேன். மூலிகை செடிகளை பூங்காக்களில் வளர்த்து சுற்றுச்சூழலுக்கு ஏதுவான இயற்கை காற்று கிடைக்க ஏற்பாடு செய்வேன். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக இந்த பகுதியில் நிறைவேற்றி கொடுப்பேன் என்றார்.

மாடம்பாக்கம் பேரூராட்சி முன்னாள் தலைவர் லோகநாதன், பேரூர் செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன், வக்கீல் கோவிந்தன், பாஜக செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம், மாடப்பாக்கம் கிழக்கு பகுதி தலைவர் தங்கராஜ், குணசீலன், பாமக விநாயகம் உள்பட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!