தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள் அவதி

தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள் அவதி
X

தாம்பரம் நகரும் படிக்கட்டுகள் ( பைல் படம்)

தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரும் படிக்கட்டை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சில நாட்களாக இந்த நகரும் படிக்கட்டானது சரிவர இயங்காமல் உள்ளது. இதனால் இதனை பயன்படுத்தும் முதியவர்கள், பெண்கள், பயணிகள், வியாபாரிகள் என ஏராளமானோர் சிரமத்தோடு படிக்கட்டில் ஏறிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நகரும் படிக்கட்டின் இயக்கத்தை சரி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!