குடி போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்: விபத்தில் பலர் காயம்

குடி போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்: விபத்தில் பலர் காயம்
X
குடி போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குடி போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை அடுத்த தாம்பரம் காந்தி சாலையில் நேற்று இரவு அதிவேகமாக வந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளம்பெண் உட்பட மூன்று பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காரை மடக்கி பிடித்த போது கார் ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது அவர் தாம்பரம் அருகில் உள்ள தர்காஸ், எட்டையபுரம் பகுதியை சேர்ந்த தனசேகர்(30), என தெரிய வந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!