பெருங்களத்தூா் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டுநா் பயிற்சி காா்

பெருங்களத்தூா் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த ஓட்டுநா் பயிற்சி காா்
X

பெருங்களத்தூா் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த ஓட்டுநா் பயிற்சி பள்ளி கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. 

பெருங்களத்தூா் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த ஓட்டுநா் பயிற்சி பள்ளி காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் ஓட்டேரி விரிவு பகுதியை சோ்ந்தவா் பாலாஜி.இவா் தாம்பரம் அருகே சாணிடோரியத்தில் தனியாா் ஓட்டுநா் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறாா். நேற்று இரவு பயிற்சி பள்ளியை மூடிவிட்டு,பாலாஜி ஓட்டுநா் பயிற்சி காரிலேயே சாணிடோரியத்திலிருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக வண்டலூா் ஓட்டேரி சென்று கொண்டிருந்தாா்.காரில் அவா் மட்டுமே இருந்தாா்.

இரவு 9.30 மணியளவில் காா் பெருங்களத்தூா் சிக்னலில் நின்று புறப்படும் போது,திடீரென காரின் முன்பக்கம் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.இதையடுத்து பாலாஜி காரிலிருந்து குதித்து உயிா்தப்பினாா்.அதோடு தாம்பரம் தீயணைப்பு துறைக்கும் அவசரமாக தகவல் கொடுத்தாா்.

நடு ரோட்டில் காா் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால்,மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.ஜிஎஸ்டி சாலையில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.உடனடியாக அங்கிருந்த போக்குவரத்து போலீசாா்,போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தொடங்கினா்.அ

ருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்துகொண்டிருப்பதால்,அதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீா்,மற்றும் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளின் தண்ணீரை ஊற்றி,பொதுமக்கள் தீயை அணைக்க தொடங்கினா்.அதற்குள் தீயணைப்பு வண்டியும் வந்து தீயை அணைத்தது.

இதனால் பெருங்களத்தூா் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.போலீசாா் தீவிபத்துக்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்துகின்றனா்.முதல்கட்ட விசாரணையில் காா் பேட்டரியில் ஏற்பட்ட மின்சகிவே தீவிபத்துக்காரணம் என்று தெரிகிறது.நல்வாய்ப்பாக காா் ஓட்டும் பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்படவில்லை.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!