சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்: காவல் நிலையத்தில் புகார்

சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்: காவல் நிலையத்தில் புகார்
X
கால் வலிக்காக சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம், சில்மிஷம் செய்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார்.



சென்னையைச் சேர்ந்த,18 வயது கல்லுாரி மாணவி, குரோம்பேட்டையில் உள்ள, தனியார் பெண்கள் கல்லூரியில், இளநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கு, சில தினங்களாக, காலில் தொடை பகுதியில், வலி இருந்துள்ளது. அதற்காக, கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப்., சாலையில் உள்ள, பிரபல தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு, எலும்பியல் பிரிவு டாக்டர், சீனிவாசன், சிகிச்சை அளிப்பதாக கூறி, மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, கல்லுாரி மாணவி, சேலையூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சி.எஸ்.ஆர்., வழங்கி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!