ஏரி மேய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் கைது

ஏரி மேய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் கைது
X

 நீதிமன்ற உத்தரவுப்படி தாம்பரம் அடுத்த மதுரபாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை இடிக்கும் வருவாய்த்துறையினர்

மதுரபாக்கம் திமுக தலைவர் வேல்முருகன் பொதுமக்களுடன் சோர்ந்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்டனர்

ஏரி மேய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் உட்பட பொது மக்களை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த மதுரபாக்கம் கிராமத்தில் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் 137 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அதே பகுதியை சேர்ந்த மனோகர் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதனடிப்படையில் உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் அக்கிரமிப்புகளை அகற்ற தவறிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.அதனால் இன்று பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா தலைமையில் பலத்த போலீசார் பாதுகாப்போடு வருவாய்த்துறை அதிகாரிகள் இடிக்க வந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மதுரபாக்கம் திமுக தலைவர் வேல்முருகன் மக்களோடு மக்களாய் நின்று வீடுகளை இடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.இதனால் போலீசார் மதுரப்பாக்கம் திமுக ஊர் தலைவர் வேல் முருகன், துணைத்தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் உட்பட பொதுமக்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பரப்பாக காணப்படுகிறது. சிலர் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு படுத்துக் கொண்டும், கதறி அழுத காட்சியும் பரிதாபமாக இருந்தது.

Tags

Next Story
ai and future cities