பாஜக மண்டல துணை தலைவரின் மண்டையை உடைத்த திமுக பிரமுகர் கைது

பாஜக மண்டல துணை தலைவரின் மண்டையை உடைத்த திமுக பிரமுகர் கைது
X

சிட்லபாக்கம் பாஜக மண்டல துணைத்தலைவர் பழனி

சிட்லபாக்கம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற பாஜக மண்டல துணை தலைவரை செங்கலால் தாக்கிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்

தாம்பரம் மாநகராட்சி, 44வது வார்டுகுட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பதற்காக சிட்லபாக்கம் மண்டல துணை தலைவர் பழனி(46), கலைமகள் தெரு, குப்புசாமி நகர் பகுதிக்கு சென்றிருந்தார்.

அப்போது 44 வது வார்டு திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவர் குடிபோதையில் பாஜக பிரமுகரிடம் தகராறில் ஈடுபட்டு செங்கலை எடுத்து அடித்து மண்டையை உடைத்துள்ளார். இதில் தலையில் காயமடைந்த பாஜக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று, அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டது.

பின்னர் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திமுக பிரமுகர் கார்த்திக் கைது செய்யப்பட்டு அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai and business intelligence