தாம்பரம் ஆரம்பசுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்

தாம்பரம் ஆரம்பசுகாதார நிலையத்தில்  கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கல்
X
ரோட்டரி சங்கம் சார்பில் தாம்பரம் நகராட்சி ஆணையர் லட்சுமணன், 50 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகளுக்கு ரோட்டரி கிளப் சார்பில் ஊட்டசத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் குழந்தை பெட்டகம் ஆகியவை வழங்கும் விழா நடைபெற்றது.

தாம்பரம் நகராட்சி ஆணையர் லட்சுமணன் கலந்து கொண்டு, கர்ப்பிணிகள்50 பேருக்கு ஊட்டசத்து தொகுப்பினை வழஙகினார். கர்ப்பிணிகளுக்கு தாய்பாலின் முக்கியத்துவம் குறித்து, மகப்பேறு மூத்த மருத்துவர் உமையாள் அறிவுரை வழங்கினார்.

தாம்பரம் ரோட்டரி சங்க தலைவர் வெற்றிவேல், செயலாளர் மருத்துவர் வனிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கிழக்கு தாம்பரம் ,பூண்டிபாஜர் ஆரம்ப சுகாதாநிலைய மருத்துவர் அலுவலர் சிவரஞ்சனி செய்திருந்தார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil