ஏமாற்றம்: இரண்டு பெண்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி

ஏமாற்றம்:  இரண்டு பெண்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி
X
கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் பணம் கொடுத்த இரண்டு பெண்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி.

சென்னை செம்மஞ்சேரி குடிசை மாற்று குடியிருப்பை சேர்ந்தவர் நந்தினி(26), இவர் தாம்பரம் ரயில்வே குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். நந்தினியின் தாய் மஞ்சுளா தாம்பரம் ரயில் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

அங்கு பூ வாங்க வருவது போல் மாடம்பாக்கத்தை சேர்ந்த வனிதா என்பவர் வந்து நன்கு பேசி பழகி கடந்த டிசம்பர் 2021ம் ஆண்டு நந்தினியிடம் 47000 ரூபாய் பணத்தை குடும்ப செலவிற்காக வாங்கியுள்ளார். மேலும் நந்தினியின் தோழியான கலைச்செல்வியிடம் 22000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் இன்று மாடம்பாக்கத்தில் உள்ள வனிதாவின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு வனிதா மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இரண்டு பெண்களும் அருகில் உள்ள கடையில் எலி மருத்து வாங்கி உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் ஆதித்யா நகர் பூங்காவில் இருவரும் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் பொதுமக்கள் பார்த்து விட்டு இருவரையும் மீட்டு ஆட்டோவில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story