வீடு தேடி வரி வசூல் திட்டம் : மதுரபாக்கம் ஊராட்சியில் துவக்கம்
மதுரபாக்கம் ஊராட்சியில் வீடு தேடி வரி வசூல் திட்டம் துவங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மதுரபாக்கம் ஊராட்சியில், தமிழகத்திலேயே முன் உதாரணமாக மதுரபாக்கம் ஊராட்சியில், வீடு தேடி வரி வசூல் செய்யும் திட்டத்தை, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா துவங்கி வைத்தார். தற்போதுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அலுவலகத்தில் சென்று பொதுமக்கள் பாதிபுக்குள்ளாகாத வகையிலும், அதிகாரிகளே இல்லம் தேடி சென்று இந்த சேவையை வழங்ககூடிய இந்த திட்டம் செயல்படுத்தபட்டுள்ளதாகவும் இது மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மதுரபாக்கம் ஊராட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அமுதா வேல்முருகன் (மதுரப்பாக்கம், அகரம் தென், ஒட்டியம்பாக்கம் , திருவஞ்சேரி) காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், ஊராட்சி மன்ற தலைவர் மு.வேல்முருகன் ஆகியோர் தலைமையேற்றனர். உடன் மதுரப்பாக்கம் கிளை கழக செயலாளர் இரா. சந்தானம், ராஜ்காம் சில்வர்க் ரெஸ்ட் நலச்சங்க தலைவர், கல்யாண் சர்மா, செயலாளர், நிர்மல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலையரசி சங்கர், ஊராட்சி உதவியாளர். கோ.சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள், நலச்சங்க நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu